/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல்
/
பராமரிப்பு இல்லாத கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல்
பராமரிப்பு இல்லாத கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல்
பராமரிப்பு இல்லாத கால்வாய் மழைநீர் செல்வதில் சிக்கல்
ADDED : ஆக 28, 2025 01:48 AM

பொன்னேரி:ஓடைக்கால்வாய் பராமரிப்பு இல்லாததால், கோரைப்புற்கள் வளர்ந்து, குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம் பகுதியில், திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, 1 கி.மீ.,க்கு ஓடைக்கால்வா ய் செல்கிறது.
இந்த கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கால்வாய் முழுதும் குப்பை கழிவுகள் குவிக்கப்படுகிறது. குடியிருப்புகளின் கழிவுநீர் நேரடியாக விடப்படுகிறது. கோரைப்புற்கள், முள்செடிகள் வளர்ந்துள்ளன.
பல்வேறு ஆக்கிரமிப்புகளால் கால்வாய் சுருங்கி வருகிறது. ஒன்றிய நிர்வாகத் தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓடைக்கால்வாயை துார்வாரி சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் ஓடைக்கால்வாய் வழியாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, பருவமழை துவங்குவதற்கு முன், ஓடைக்கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், குடியிருப்பு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.