/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி பள்ளிப்பட்டில் சுகாதாரம் கேள்விக்குறி
/
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி பள்ளிப்பட்டில் சுகாதாரம் கேள்விக்குறி
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி பள்ளிப்பட்டில் சுகாதாரம் கேள்விக்குறி
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி பள்ளிப்பட்டில் சுகாதாரம் கேள்விக்குறி
ADDED : மே 19, 2025 02:08 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகாவில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் வாயிலாக பகுதிவாசிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது.
அதிலிருந்து, ஊராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் திறந்துவிடப்படுகிறது. குடிநீரை தேக்கி வைக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்து சீராக பராமரிக்க வேண்டும்.
மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தது குறித்து பகுதிவாசிகளும் தெரிந்து கொள்ளும் விதமாக, அந்தந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளில், கடைசியாக சுத்தம் செய்யப்பட்ட தேதியும், அடுத்து சுத்தம் செய்யப்பட வேண்டிய தேதியும் குறிப்பிடப்பட வேண்டும்.
இதற்கான அறிவிப்பு பலகை அங்குள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதே இல்லை எனவும், அதற்கான தேதியும் குறிப்பிடப்படுவது இல்லை எனவும் பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கொல்லமதுராபுரம், ஆதிவராகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளின் மேல்தளம் உருக்குலைந்து கான்கிரீட் கழிவுகள் தொட்டியில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
பலவீனமாக உள்ள இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்ய யாரும் முன்வருவது இல்லை எனவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து, சுத்தம் செய்ய ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.