/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி தொற்று நோய் பரவும் அபாயம்
/
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி தொற்று நோய் பரவும் அபாயம்
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி தொற்று நோய் பரவும் அபாயம்
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி தொற்று நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூலை 28, 2025 02:30 AM

போளிவாக்கம்,:போளிவாக்கம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாததால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சியில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த குடிநீர் தொட்டி, 2012 - 13ம் ஆண்டு, ஊரக கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், 51,000 ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.
அதன்பின், 12 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால், தொட்டி பழுதடைந்து வருவதோடு, வினியோகிக்கப்படும் குடிநீரை பகுதிமக்கள் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.