/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத மீன் விற்பனை கூடம் செடிகள் வளர்ந்து கட்டடம் பலவீனம்

ADDED : அக் 27, 2025 12:58 AM

பழவேற்காடு: பழவேற்காடு மீன் இறங்குதளத்தில் உள்ள விற்பனை கூட கட்டடம் செடிகள் வளர்ந்து, பராமரிப்பு இன்றி இருப்பதால், பலவீனம் அடையும் அபாயம் உள்ளது.
பழவேற்காடு மீனவ பகுதியில், 35 மீனவ கிராமங்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. மீனவர்கள் ஏரி மற்றும் கடலில் பிடித்து வரப்படும் மீன்கள், மீன் இறங்குதளம் வளாகத்தில் உள்ள விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
விற்பனை கூடத்தின் உள்பகுதியில், 100க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மீன் விற்பனை கூட கட்டடம் பராமரிப்பு இன்றி உள்ளது.
இந்த கட்டடத்தின் மேல்பகுதியில் தண்ணீர் தேங்கியும், வர்ணம் மங்கியும் உள்ளது.
மேலும், ஆங்காங்கே செடிகள் வளர்ந்து இருப்பதால், கட்டடம் பலவீனம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, அதே பகுதியில் மீன் விற்பனை கூடம் விரிவாக்கத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையில், பராமரிப்பு இன்றி இருக்கும் இந்த கட்டடத்தையும் புதுப்பிக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.