/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத குருவி அகரம் கிராம குளம்
/
பராமரிப்பில்லாத குருவி அகரம் கிராம குளம்
ADDED : டிச 31, 2025 05:43 AM

கும்மிடிப்பூண்டி: சீரழிந்து வரும் குருவி அகரம் கிராம குளத்தை துார்வாரி பராமரிக்க வேண்டும் என, குருவி அகரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது, குருவி அகரம் கிராமம். கிராம குடியிருப்புக்கு மத்தியில், 3 ஏக்கர் பரப்பளவில், பரந்து விரிந்த குளம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை, இக்குளத்து நீரை கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஊராட்சி நிர்வாகமும், சுற்றியுள்ள குடியிருப்பு மக்களும் குளத்தை முறையாக பராமரிக்க தவறியதால், தற்போது மாசடைந்து, குளத்தின் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கழிவுகள் சூழ்ந்து பொலிவிழந்த குளத் தை துார்வாரி, சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

