/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டியில் பராமரிப்பில்லாத மழையளவு கண்காணிப்பு மையம்
/
பூண்டியில் பராமரிப்பில்லாத மழையளவு கண்காணிப்பு மையம்
பூண்டியில் பராமரிப்பில்லாத மழையளவு கண்காணிப்பு மையம்
பூண்டியில் பராமரிப்பில்லாத மழையளவு கண்காணிப்பு மையம்
ADDED : அக் 18, 2024 02:34 AM

திருவள்ளூர்:பூண்டியில் உள்ள மழையளவு கண்டறியும் மையம் பராமரிப்பின்றி உள்ளது.
பூண்டி நீர்தேக்கத்தில், பொதுப்பணி-நீர்வள ஆதாரத் துறை அலுவலகம் அருகில், மழையளவை கண்டறியும் மையம் உள்ளது.
அருகிலேயே, 'ஒயர்லெஸ்' கருவி தொடர்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தைச் சுற்றிலும், செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. மழையளவு கண்டறியும் சேதமடையும் நிலை உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், தொடர்ந்து மழை பெய்து வரும். மழையளவு விவரம் அறிந்த பின்னரே, நீர்தேக்கத்தில் தண்ணீர் அளவு பராமரிக்க இயலும்.
எனவே, பொதுப்பணி-நீர்வள ஆதாரத்துறையினர், முறையாக இம்மையத்தை பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.