/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை
/
ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை
ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை
ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை
ADDED : பிப் 05, 2025 02:16 AM

ஊத்துக்கோட்டை:ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், மதுரவாசல் பகுதியில் உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு, ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மேற்கண்ட நெடுஞ்சாலையில் தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் உள்ள பள்ளி அருகே வேகத்தடை உள்ளது. இதில், வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது.
இதனால், இந்த பள்ளி அருகே, வேகத்தடை உள்ளது தெரியாமல், வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் பிடிப்பதால், விபத்து ஏற்படுகின்றன.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மதுரவாசல் பகுதியில் உள்ள வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.