/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வர்ணம் பூசாத வேகத்தடை ஏ.என்.குப்பத்தில் அபாயம்
/
வர்ணம் பூசாத வேகத்தடை ஏ.என்.குப்பத்தில் அபாயம்
ADDED : ஜூன் 21, 2025 06:59 PM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே கீழ்முதலம்பேடு துவங்கி மேல்முதலம்பேடு, ஏ.என்.குப்பம், ஆர்.என்.கண்டிகை வழியாக லட்சுமிபுரம் வரையிலான சாலை, தமிழ்நாடு கிராமப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளது.
இச்சாலையை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட 9 கி.மீ., சாலையில், மொத்தம் 51 வேகத்தடைகள் அமைகப்பட்டன. சாலை புதுப்பிக்கப்பட்ட போது, வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டது.
தற்போது, வர்ணம் முற்றிலும் அழிந்துவிட்டது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சிலர், நிலை தடுமாறி விபத்தில் சிக்குவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உடனடியாக வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் அடித்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.