/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிரங்க் சாலையில் வடியாத மழைநீரால் சுகாதார சீர்கேடு
/
டிரங்க் சாலையில் வடியாத மழைநீரால் சுகாதார சீர்கேடு
டிரங்க் சாலையில் வடியாத மழைநீரால் சுகாதார சீர்கேடு
டிரங்க் சாலையில் வடியாத மழைநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 13, 2024 02:08 AM

பூந்தமல்லி:சென்னையின் புறநகரில் அமைந்துள்ள பூந்தமல்லி நகராட்சியின் பிரதான சாலையாக, டிரங்க் சாலை உள்ளது.
இந்த சாலையில், பூந்தமல்லி நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், நீதிமன்றம், சார் - பதிவாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், காவல் நிலையம் மற்றும் ஏராளமான வணிக கடைகள் உள்ளன.
தினமும் ஏராளமானோர் கடந்து செல்லும் இந்த சாலையில், மழைநீர் வடிகால்வாய் இல்லை. இதனால், சிறு மழை பெய்தாலே சாலையில் குட்டை போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் மழை நீர் வடியாமல் ஒரு வாரம் வரை தேங்கி நிற்கிறது.
இதில் கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசுவதால், பூந்தமல்லியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
பருவ மழை காலம் துவங்கியுள்ளதால், இந்த சாலையில் மழைநீர் வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகளை, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.