/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத நிழற்குடைகள் புதருக்குள் மாயமாகும் அவலம்
/
பராமரிப்பில்லாத நிழற்குடைகள் புதருக்குள் மாயமாகும் அவலம்
பராமரிப்பில்லாத நிழற்குடைகள் புதருக்குள் மாயமாகும் அவலம்
பராமரிப்பில்லாத நிழற்குடைகள் புதருக்குள் மாயமாகும் அவலம்
ADDED : அக் 20, 2024 01:02 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்துள்ளது திருப்பாச்சூர். இங்கிருந்து, கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில், நியாய விலைக் கடை அருகே, பயணியர் பயன்படுத்துவதற்காக, நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிழற்குடையை பயன்படுத்தி பயணியர் திருவள்ளூர் சென்று வருகின்றனர்.
இந்த நிழற்குடை பராமரிபில்லாததால் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடப்பதால், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது .இதனால், காத்திருக்கும் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும், நிழற்குடையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வெங்கத்துார் அடுத்துள்ளது புட்லுார் பேருந்து நிறுத்தம். இப்பகுதியில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையும் பராமரிப்பில்லாததால் புதர் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் பயணியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி பகுதியில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகளை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.