/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயனுக்கு வராத மின்கம்பம்: ரங்காபுரத்தில் விபத்து அபாயம்
/
பயனுக்கு வராத மின்கம்பம்: ரங்காபுரத்தில் விபத்து அபாயம்
பயனுக்கு வராத மின்கம்பம்: ரங்காபுரத்தில் விபத்து அபாயம்
பயனுக்கு வராத மின்கம்பம்: ரங்காபுரத்தில் விபத்து அபாயம்
UPDATED : டிச 25, 2025 08:06 AM
ADDED : டிச 25, 2025 06:57 AM

ஆர்.கே.பேட்டை: ரங்காபுரத்தில் சேதமடைந்த மின்கம்பத்திற்கு மாற்றாக, புதிய கம்பம் நடப்பட்டும், மின் இணைப்பு மாற்றப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் தாமனேரி ஊராட்சிக்கு உட்பட்டது ரங்காபுரம். இங்குள்ள கம்பம் சேதமடைந்து, உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதற்கு மாற்றாக, புதிதாக கம்பம் அமைக்கப்பட்டது.
ஆனால், இதுவரை புதிய கம்பத்திற்கு மின் இணைப்பு மாற்றப்படாமல் உள்ளது. இதனால், விபத்து அபாயத்தில் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இந்த வழியாக செல்லும் மாணவர்கள், சேதமடைந்த மின்கம்பத்தால் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் பாதுகாப்பு கருதி, புதிய கம்பத்திற்கு மின் இணைப்பை மாற்றி அமைத்து, சேதமடைந்த கம்பத்தை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.