/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ரயில் நிலைய பணி மந்தம்: விரைந்து முடிக்க பயணியர் கோரிக்கை
/
திருவள்ளூர் ரயில் நிலைய பணி மந்தம்: விரைந்து முடிக்க பயணியர் கோரிக்கை
திருவள்ளூர் ரயில் நிலைய பணி மந்தம்: விரைந்து முடிக்க பயணியர் கோரிக்கை
திருவள்ளூர் ரயில் நிலைய பணி மந்தம்: விரைந்து முடிக்க பயணியர் கோரிக்கை
UPDATED : டிச 25, 2025 08:06 AM
ADDED : டிச 25, 2025 06:58 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில், 28 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திற்கு பயணியர் சஙகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் 1.50 லட்சம் பேர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு, 160 புறநகர் மின்சார ரயில்களும், 11 விரைவு ரயில்களும் நின்று செல்கின்றன.
ஆண்டுக்கு, 15 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வரும் திருவள்ளூர் ரயில் நிலையம், கிரேடு 2 அந்தஸ்தை பெற்றுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், திருவள்ளூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி, 28 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியது.
பணி துவங்கிய ஓராண்டுக்குள் நிறைவு பெறும் என, ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ரயில் நிலையம் அருகில் இருந்த பழைய கட்டடங்களை அகற்றி, பிரமாண்டமான நுழைவாயில் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆறு நடைமேடைகளை இணைக்கும் நடைமேம்பாலம், 1, 2 மற்றும் 3வது நடைமேடைகளின் கூரைகள் நீட்டிப்பு, முதல் மற்றும் ஆறாவது நடைமேடையில் 'லிப்ட்' மற்றும் புதுப்பிப்பு போன்ற பணிகள் துவங்கின.
ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவடையாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. நுழைவாயில் மற்றும் நடைமேம்பாலம் அமைக்கும் பணி, ஆறு மாதமாக பாதியில் நிற்கிறது. நடைமேடையை புதுப்பிக்கும் பணி அரைகுறையாக உள்ளது. 'லிப்ட்' அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, நுழைவாயில் மற்றும் 'ஆர்ச்' மட்டுமே தயார் நிலையில் உள்ளது. மீதமுள்ள பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், ஜூலை மாதம் திருவள்ளூரில் ஆய்வு செய்து, பணியை துரிதப்படுத்தி, ஜன., மாதத்திற்குள் நிறைவேற்றுமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆனால், ரயில்வே மேலாளர் ஆய்வு செய்து ஒரு மாதமாகியும், எவ்வித பணியும் துவக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

