/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி
/
பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : ஏப் 24, 2025 02:19 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாபுரம் சுவாமிநகர் பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் குடிநீர் வசதிக்காக, ஒன்றிய நிர்வாகம் ஜல்-ஜீவன் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாய் மூலம், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, குடிநீர் வினியோகம் செய்யவில்லை.
இதனால் குடிநீருக்காக சுவாமி நகர் பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரிப்பதால், தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே ஒன்றிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பி, தெருக்குழாய்கள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.