/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏ.டி.எம்., மிஷினை திறந்து திருட்டு உ.பி., மாநில வாலிபர்கள் சிக்கினர்
/
ஏ.டி.எம்., மிஷினை திறந்து திருட்டு உ.பி., மாநில வாலிபர்கள் சிக்கினர்
ஏ.டி.எம்., மிஷினை திறந்து திருட்டு உ.பி., மாநில வாலிபர்கள் சிக்கினர்
ஏ.டி.எம்., மிஷினை திறந்து திருட்டு உ.பி., மாநில வாலிபர்கள் சிக்கினர்
ADDED : பிப் 23, 2024 10:50 PM

கொளத்துார்:கொளத்துார் 200 அடி சாலை, திருமலை நகரில் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த 20ம் தேதி அதிகாலை 2:20 மணியளவில், அதன் உள்ளே சென்ற இருவர், ஏ.டி.எம்., மிஷினை திறந்து, 6,000 ரூபாய் எடுத்தனர். மேலும் பணம் எடுக்க முயன்றனர்.
இது, மும்பையில் உள்ள வங்கியின் தலைமை கண்காணிப்பு அலுவலகத்தின் காட்சி பதிவு வாயிலாக தெரிய வந்தது. உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜமங்கலம் போலீசார் அங்கு சென்று, இருவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில், உத்தர பிரதேசம் மாநிலம், பராசெத்பூரைச் சேர்ந்த அஞ்சுசர் படேல், 21, வினய்குமார், 19, என்பது தெரிய வந்தது. சில மாதங்களுக்கு முன், சென்னை வந்தவர்கள் மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், 'பொக்லைன்' இயந்திர ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
நள்ளிரவு முதல் அதிகாலை வரை, ஏ.டி.எம்., மையங்களில், நுாதன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, ஏ.டி.எம்., மிஷினில் பணம் வெளியே வரும் இடத்தில், 'சில்வர் டேப்பை' இறுக்கமாக ஒட்டி வைத்து விடுவர். வாடிக்கையாளர், சில நிமிடம் காத்திருந்து பணம் வரவில்லை என, சென்று விடுவர்.
ஆனால், வெளியான பணம் 'சில்வர் டேப்' தடையால், பக்கவாட்டில் தங்கி விடும். மேற்கண்ட இருவரும், மிஷினின் அப்பகுதியை திறந்து, பணத்தை திருடிச்செல்வது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.