/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் தேங்கும் மழைநீர் வடிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
/
சாலையில் தேங்கும் மழைநீர் வடிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
சாலையில் தேங்கும் மழைநீர் வடிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
சாலையில் தேங்கும் மழைநீர் வடிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 14, 2025 02:40 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு------மணவூர் சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வகையில், கால்வாய் அமைக்க வேண்டும் என, மணவூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாலங்காடு,--- மணவூர் சாலை பராசக்தி நகரில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 20க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், இச்சாலை வழியாகவே சென்று வருகின்றனர்.
மழை நேரங்களில் இச்சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சகதியாக மாறிவிடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவ - - மாணவியர் தெருவில் தேங்கும் மழை நீரில் நடந்து சென்று சிரமப்படுகின்றனர்.
மழை நேரங்களில் இத்தெருவில் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, திருவாலங்காடு ---- மணவூர் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.