/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்
/
பொன்னேரி காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்
பொன்னேரி காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்
பொன்னேரி காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2025 09:42 PM
பொன்னேரி:பொன்னேரி காவல் நிலையம் மற்றும் உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
பொன்னேரி தாலுக்கா அலுவலக சாலையில், செயல்பட்டு வந்த பொன்னேரி காவல் நிலையம் கட்டடம் பழுதடைந்ததால், 2019ல் பொன்னேரி - செங்குன்றம் சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு கீழ்தளத்தில் காவல் நிலையமும், முதல் தளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையமும் செயல்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பொன்னேரி காவல் நிலையம் ஆவடி கமிஷனரகத்துடன் இணைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆகஸ்ட்டில் பொன்னேரி, திருப்பாலைவனம், காட்டூர் காவல் நிலையங்களை உள்ளடக்கி, 'பொன்னேரி காவல் சரகம்' உருவாக்கப்பட்டு, உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
அதற்கான அலுவலகமும், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டடத்திலேயே அமைக்கப்பட்டது.
தற்போது, ஒரே கட்டத்தில், சட்டம் - ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் உதவி கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது.
ஒரே கட்டடத்தில், மூன்று பிரிவுகளும் செயல்படும் நிலையில் கடும் இடநெருக்கடி இருக்கிறது.
விசாரணை கைதிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
அதே வளாகத்தில், தேவையான இடவசதி இருப்பதால், தனித்தனி வளாகங்களுடன் புதிய கட்டடங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.