/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வார வலியுறுத்தல்
/
குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வார வலியுறுத்தல்
குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வார வலியுறுத்தல்
குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வார வலியுறுத்தல்
ADDED : மே 12, 2025 11:22 PM
திருவாலங்காடு, கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குளம் மற்றும் குட்டைகளை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார்வாரி, பருவமழை சமயங்களில் நீர் நிரம்பும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனகம்மாசத்திரம், மணவூர், களாம்பாக்கம், திருவாலங்காடு, பூனிமாங்காடு உள்ளிட்ட பல இடங்களில், மானாவாரி விவசாய பரப்பு அதிகம் உள்ளது.
இப்பகுதிகளில் உள்ள குளம், குட்டையில் மழையின் போது, அவற்றில் நிரம்பும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.
விவசாய நிலங்களுக்கான தண்ணீர் தேவையும் தன்னிறைவு பெறுகிறது. துார்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்ட குளம், குட்டைகளில் நிரம்பும் தண்ணீர், சில மாதங்கள் வரை தேவையை பூர்த்தி செய்கிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கிராம ஊராட்சிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளம், குட்டைகள் துார்வாரப்பட்டதன் விளைவாக, பல ஆண்டுகளாக நிரம்பாத குளம், குட்டைகள் கூட நிரம்பின.
இது, மக்களின் தண்ணீர் தேவையை வெகுவாக பூர்த்தி செய்தது. தற்போது, கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வறண்ட மற்றும் செடி, கொடிகள் வளர்ந்த குளம், குட்டைகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார்வாரி சீரமைக்க வேண்டும்.
இதன் வாயிலாக, பருவ மழையின் போது முழு அளவில் தண்ணீர் நிரம்பும். இதன் வாயிலாக, கிராமங்கள் செழிக்கவும் உதவியாக இருக்கும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.