/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மூடி அமைக்க வலியுறுத்தல்
/
செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மூடி அமைக்க வலியுறுத்தல்
செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மூடி அமைக்க வலியுறுத்தல்
செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மூடி அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 02, 2025 11:08 PM

பொன்னேரி :மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.
ஆழ்துளை கிணறுகள் செயலிழக்கும் நிலையில், மாற்று இடங்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படுகிறது.
அதே சமயம் பழைய ஆழ்துளை கிணறுகள் அப்படியே திறந்த நிலையில் விடப்படுகின்றன. திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடிபோட்டு வைத்திருக்க வேண்டும் என, தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பு இல்லாமல் திறந்தநிலையில் உள்ளன.
எனவே, ஊராட்சிகள் தோறும் ஆய்வு செய்து, செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை, மழைநீர் தொட்டிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.