/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தணிகாசலம்மன் கோவிலில் உறியடி விழா
/
தணிகாசலம்மன் கோவிலில் உறியடி விழா
ADDED : செப் 15, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி;தணிகாசலம்மன் கோவிலில் நேற்று நடந்த உறியடி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி அக்கைய்ய நாயுடு சாலையில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கிருஷ்ணர் ஜெயந்தி முடிந்ததும், உறியடி விழா நடத்தப்படும்.
அந்த வகையில், நேற்று உறியடி விழா நடந்தது.
இதில் இளைஞர்கள், பெண்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. தொடர்ந்து, உற்சவர் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் டிராக்டரில் வீதியுலா வந்தார்.
அப்போது, பெண்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.