/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாயமாகி வரும் கம்பம்: மின்வாரியம் அலட்சியம்
/
மாயமாகி வரும் கம்பம்: மின்வாரியம் அலட்சியம்
ADDED : நவ 17, 2025 12:35 AM

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மின்கம்பத்தில் சூழ்ந்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றாமல், மின்வாரிய அதிகாரிகள் அலட்சிம் காட்டி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக, குறிப்பிட்ட இடைவெளியில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாம்பாக்கம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அவசர காலத்தில் மின் வினியோகம் தடைபட்டால், அதில் ஏறி சீரமைக்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் உடனே மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

