/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் வி.சி., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
/
மீஞ்சூரில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் வி.சி., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
மீஞ்சூரில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் வி.சி., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
மீஞ்சூரில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் வி.சி., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : மே 21, 2025 03:03 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சியில் அறிவுசார் மையம், தெருச்சாலைகள் உள்ளிட்ட திட்ட பணிகளை மேற்கொள்ள, சிறப்பு நிதியாக 6.50 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியது.
இந்த நிதியை பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும், அங்குள்ள மக்களின் தேவைக்கு ஏற்ப சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என, கவுன்சிலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்திருந்தனர்.
மேற்கண்ட நிதியில், குறிப்பிட்ட ஒரே வார்டில் பணிகளை மேற்கொள்ள, பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான ஒப்பந்தம் கோரியது. இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி நேற்று ஒப்பந்தம் விட திட்டமிடப்பட்டது.
இதை கண்டித்து, வி.சி., கட்சியைச் சேர்ந்த இரண்டாவது வார்டு கவுன்சிலர் அபுபக்கர், நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மீஞ்சூர் பேரூராட்சியில் பல்வேறு வார்டுகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் நிதியை பிரித்து அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், பேரூராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
எனது வார்டில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை தள்ளிவைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சு நடத்தினார். பின், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனன் கூறியதை தொடர்ந்து, அபுபக்கர் போராட்டத்தை கைவிட்டார்.