/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலையை கண்டித்து வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
தொழிற்சாலையை கண்டித்து வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தொழிற்சாலையை கண்டித்து வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தொழிற்சாலையை கண்டித்து வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 03, 2025 07:42 PM
கும்மிடிப்பூண்டி:காற்று மற்றும் ஓடை நீரில் மாசு ஏற்படுத்தி வரும் தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வி.சி., கட்சியினர் கிராம மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராமத்திற்கு உட்பட்ட இடத்தில், தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் புகை, காற்றில் கலந்து, கிராம மக்கள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
தொழிற்சாலையில் இருந்த திறந்து விடப்படும் கழிவுநீர், அதை ஒட்டியுள்ள ஓடையில் கலந்து, ஓடை நீர் மாசடைந்து வருகிறது என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஓடை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், தொழிற்சாலையின் செயல்பாட்டை கண்டித்து, வி.சி., கட்சியினர் மற்றும் கிராம மக்கள் நேற்று, பெத்திக்குப்பம் சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, தொழிற்சாலை மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.