ADDED : அக் 03, 2025 07:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:ஆந்திராவில் இருந்து இரண்டு பைக்குகளில், குட்கா பொருட்கள் கடத்தி வந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று, வாகன சோதனை மேற்கொண்டபோது, ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற இரண்டு பைக்குகளை நிறுத்தி சோதனைசெய்தனர்.
அப்போது, 50 கிலோ குட்கா பாக்கெட்டுகள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளத்தைச் சேர்ந்த லோகேஷ், 29, ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகம், 38, ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து, ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.