/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை
/
திருத்தணி கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை
ADDED : ஏப் 10, 2025 08:35 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
இன்று பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடும் என்பதால் அதிகாலை 3:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
மேலும் பக்தர்களின் வாகனங்களால் மலைக்கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க இன்று காலை முதல் வாகனங்கள் மலைகோவிலுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.
மலைக்கோவில் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.