தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஏப் 24, 2025 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை:வெள்ளியூர் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, வி.ஏ.ஓ., முனிரத்தினம் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தனியார் நிலத்தில் இருந்து செங்கல் சூளைக்கு திருட்டு மணல் எடுத்தது தெரிந்தது. இதுதொடர்பாக இரண்டு டிராக்டர், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், வாகனங்களின் ஓட்டுனர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us