/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தார்ப்பாய் மூடாமல் கரும்பு சக்கையுடன் வரும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
தார்ப்பாய் மூடாமல் கரும்பு சக்கையுடன் வரும் வாகனங்களால் விபத்து அபாயம்
தார்ப்பாய் மூடாமல் கரும்பு சக்கையுடன் வரும் வாகனங்களால் விபத்து அபாயம்
தார்ப்பாய் மூடாமல் கரும்பு சக்கையுடன் வரும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : பிப் 05, 2025 02:12 AM

திருவாலங்காடு:திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு, திருவாலங்காடு, அரக்கோணம், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து, கரும்பு அரவைக்கு வருகிறது.
கரும்பு அறுவடைக்கு பின், கழனியில் இருக்கும் சக்கை கரும்பு ஆலைக்கு வரவழைக்கப்பட்டு எரியூட்ட பயன்படுத்தப்படுகிறது.
அப்படி சக்கையை ஏற்றி வரும் வாகனங்கள் பெரும்பாலும், அரக்கோணம் -- திருவள்ளூர் நெடுஞ்சாலை, திருப்பதி-- - சென்னை தேசிய நெடுஞ்சாலை, தக்கோலம் -- கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலை என, முக்கிய சாலை வழியாக வருகிறது.
இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், சக்கையை ஏற்றி வரும் வாகனங்கள், தார்ப்பாய் கொண்டு மூடாமல் அளவுக்கு அதிகமாக ஏற்றி வருவதால், கரும்பு சக்கை காற்றில் சாலையில் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கண்ணீல் விழுவதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி, கரும்பு சக்கை ஏற்றி வரும் வாகனங்களுக்கு முறையான தார்ப்பாய் மூடி சரியான அளவில் சக்கை கொண்டு வர அறிவுறுத்த வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.