/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வானகரம் சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
/
வானகரம் சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 17, 2025 01:43 AM

வானகரம்:-சென்னை --- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி வரை, சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இதில், மதுரவாயல் --- பூந்தமல்லி வரை சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இச்சாலை வழியாக கனரக வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், வானகரம் அருகே சர்வீஸ் சாலையின் ஒரு பகுதியில், அங்குள்ள உணவகம் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மற்றொரு பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் லோடு வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.
வாகன ஆக்கிரமிப்பால் சர்வீஸ் சாலை அமைத்ததின் நோக்கும் நிறைவேறாமல் உள்ளது. எனவே, வானகரம் சர்வீஸ் சாலையில் உள்ள வாகன ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.