/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் நிற்கும் வாகனங்கள் கோபாலபுரத்தில் விபத்து அபாயம்
/
சாலையோரம் நிற்கும் வாகனங்கள் கோபாலபுரத்தில் விபத்து அபாயம்
சாலையோரம் நிற்கும் வாகனங்கள் கோபாலபுரத்தில் விபத்து அபாயம்
சாலையோரம் நிற்கும் வாகனங்கள் கோபாலபுரத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜன 29, 2025 12:29 AM

ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டையில் இருந்து, சித்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கோபாலபுரம் கிராமம். இதன் அருகே மாநில நெடுஞ்சாலையையொட்டி, முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும் இந்த கோவிலுக்கு சுற்றுலா வாகனங்களும் வந்து செல்கின்றன.
கோவிலுக்கு வரும் வாகனங்கள், மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விபத்து நேரிடும் அபாயமும் உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில், சுற்றுலா வாகனங்களை கோவில் வளாகத்திற்குள் பார்க்கிங் அமைத்து நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.