/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
/
போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
ADDED : மே 27, 2025 08:19 PM
திருவள்ளூர்:குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 30ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின் போது பொது விநியோகத் திட்ட பொருட்களுடன் கூடிய வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 80 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வரும் 29ம் தேதிக்குள் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டும், அவற்றின் உரிமையாளர்கள் மீட்டுச் செல்லவில்லை. இதையடுத்து, உரிமைக் கோரப்படாத வாகனங்களாக கருதி அரசுக்கு ஆதாயம் செய்யும் வகையில், திருவள்ளூர் குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வு துறை அலுவலகத்தில், டூ- வீலர், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என, 70 வாகனங்கள் 30 ம் தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்படும்.
மேலும் சென்னை சரக குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடர்புடைய 10 வாகனங்கள் 31 ம் தேதி சென்னை, சூரப்பட்டு வேலம்மாள் பள்ளி எதிரில் பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.