/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய சதுரங்க போட்டி வேலம்மாள் பள்ளி சாம்பியன்
/
தேசிய சதுரங்க போட்டி வேலம்மாள் பள்ளி சாம்பியன்
ADDED : செப் 08, 2025 11:35 PM

திருவள்ளூர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான தேசிய சதுரங்க போட்டியில், சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சதுரங்க போட்டி, கடந்த 2 - 5ம் தேதி வரை நடந்தது.
இதில், இந்தியாவைச் சேர்ந்த ஒன்பது மண்டலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் மற்றும் சி.பி.எஸ்.சி.இ., பள்ளிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட அயல் நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தார், ஓமன், குவைத் ஆகிய அணிகளும் பங்கேற்றன.
இதில், தென்மண்டலம் -- 1ல் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவைச் சேர்ந்த கவின், கிஷோர் பிரஜித், நிஜேஷ், பரிதிநாராயண் ஆகிய மாணவர்கள், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றனர்.
இதையடுத்து, வரும் டிசம்பர் மாதம் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற இருக்கும் 69வது பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு இந்தியா போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.