/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வயல்வெளியில் பழுதடைந்த மின்கம்பங்கள் அச்சத்தில் வேலஞ்சேரி விவசாயிகள்
/
வயல்வெளியில் பழுதடைந்த மின்கம்பங்கள் அச்சத்தில் வேலஞ்சேரி விவசாயிகள்
வயல்வெளியில் பழுதடைந்த மின்கம்பங்கள் அச்சத்தில் வேலஞ்சேரி விவசாயிகள்
வயல்வெளியில் பழுதடைந்த மின்கம்பங்கள் அச்சத்தில் வேலஞ்சேரி விவசாயிகள்
ADDED : ஜன 12, 2025 01:04 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், விவசாயத்தை நம்பியே உள்ளனர்.
இந்நிலையில், வேலஞ்சேரியில், 100 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல், பூ, கரும்பு மற்றும் சவுக்கு போன்ற பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாய கிணறுகளுக்கு, மின்வாரிய துறையினர், வயல்வெளியில் மின்கம்பங்கள் நட்டு, அதன் வாயிலாக மின்மோட்டார்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மின்கம்பங்களை முறையாக பராமரிக்காததால், ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக மூன்று மின்கம்பங்கள் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் உடைந்து வயல்வெளியில் விழும் அபாயம் உள்ளது.
இதனால், விவசாயிகள் வயல்வெளியில் பயிரிடுவதற்கு அச்சப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்கள் பொருத்த வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, திருத்தணி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பழுதடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் நட்டு, மின் இணைப்பு வழங்கப்படும்' என்றார்.