/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெங்கத்துார் கிராம மக்கள் பொங்கல் தொகுப்பு புறக்கணிப்பு
/
வெங்கத்துார் கிராம மக்கள் பொங்கல் தொகுப்பு புறக்கணிப்பு
வெங்கத்துார் கிராம மக்கள் பொங்கல் தொகுப்பு புறக்கணிப்பு
வெங்கத்துார் கிராம மக்கள் பொங்கல் தொகுப்பு புறக்கணிப்பு
ADDED : ஜன 10, 2025 01:58 AM

கடம்பத்துார்திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ளது வெங்கத்துார் ஊராட்சி. இந்த ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
இந்த ஊராட்சிக்குட்பட்ட 15வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர்கள், நுாறு நாள் வேலை பாதிப்பு, குடிநீர், சொத்து வரி அதிகரிப்பு, ஊராட்சிகளுக்கான சலுகைகள் பறிப்பு போன்ற காரணங்களை முன்வைத்து, நேற்று, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில், வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வாங்க மறுப்பு தெரிவித்து நேற்று அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், கிராமத்தில் உள்ள ரேஷன் கடையை முற்றுகையிட்டு, தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின் கிராமத்தில் சாலையின் இருபுறமும் மனித சங்கிலியாக நின்று அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், இந்த வெங்கத்தூர் 15வது வார்டை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் மட்டுமே எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதுகாக்கப்படும் என, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை வைத்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மணவாள நகர் போலீசார் மேற்கொண்டனர்.

