/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கற்கள் பெயர்ந்த சாலை வேப்பம்பட்டு வாசிகள் அவதி
/
கற்கள் பெயர்ந்த சாலை வேப்பம்பட்டு வாசிகள் அவதி
ADDED : மே 30, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பம்பட்டு:திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு அருகே உள்ளது 89 வேப்பம்பட்டு ஊராட்சி.
இங்குள்ள ரயில் நிலையத்தில் இருந்து ஊராட்சி மன்றம் வழியே உள்ள ஒன்றிய சாலையை வேப்பம்பட்டு மற்றும் பெருமாள்பட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
இந்த சாலை கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
இதனால் நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேப்பம்பட்டு பகுதியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.