/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்ட அளவிலான கூடைப்பந்து வித்யோதயா பள்ளி முதலிடம்
/
மாவட்ட அளவிலான கூடைப்பந்து வித்யோதயா பள்ளி முதலிடம்
மாவட்ட அளவிலான கூடைப்பந்து வித்யோதயா பள்ளி முதலிடம்
மாவட்ட அளவிலான கூடைப்பந்து வித்யோதயா பள்ளி முதலிடம்
ADDED : நவ 26, 2024 06:32 AM
சென்னை: தென்சென்னை மாவட்ட அளவிலான மாணவியர் கூடைப்பந்து போட்டியில், இரு பிரிவுகளிலும், வள்ளுவர்கோட்டம் வித்யோதயா பள்ளி மாணவியர், முதலிடங்களை தட்டிச் சென்றனர்.
அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், தென் சென்னை வருவாய் மாவட்ட அளவில், மாண வியருக்கான கூடைப்பந்து போட்டிகள், சாந்தோம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது. அதில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளிலும், 20 குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற பள்ளி அணிகள் எதிர்கொண்டன.
போட்டியில், 19 வயதுக்கு உட்பட்ட இறுதிப் போட்டியில், வள்ளுவர்கோட்டம் வித்யோதயா பள்ளி மற்றும் மயிலாப்பூர்லேடி சிவசாமி பள்ளிகள்மோதின. அதில், 39 - 33என்ற கணக்கில், வித்யோதயா பள்ளி வெற்றிபெற்று முதலிடத்தை பிடித்தது.
அதேபோல், 17 வயது பிரிவிலும், வித்யோதயா பள்ளி, 30 - 17 என்ற கணக்கில், செயின்ட் ரபேல்ஸ் பள்ளியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
இருபிரிவிலும் வெற்றி பெற்ற வித்யோதயா பள்ளி மாணவியர், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுஉள்ளனர்.