/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா விற்னையில் ஈடுபட்டதால் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
/
கஞ்சா விற்னையில் ஈடுபட்டதால் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
கஞ்சா விற்னையில் ஈடுபட்டதால் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
கஞ்சா விற்னையில் ஈடுபட்டதால் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
ADDED : ஆக 03, 2025 12:13 AM

பொன்னேரி:கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பொன்னேரி அடுத்த தச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 32. இவர், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட நத்தம் மற்றும் கீழ்மேனியில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இரு நாட்களுக்கு முன், கவரைப்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்தின்படி கார்த்திக்கிடம் விசாரித்தனர்.
அப்போது, கையில் வைத்திருந்த கருப்பு நிற பொட்டலத்தை துாக்கி எறிந்த கார்த்திக், அங்கிருந்து தப்பிச் சென்றார். போலீசார் அதை கைப்பற்றி சோதனையிட்டபோது, கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிந்தது. தப்பிச் சென்ற வாகன பதிவெண்ணை கொண்டு கார்த்திக்கை கைது செய்தனர்.
விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அதன்பின், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து பொன்னேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால், கிராம உதவியாளர் பணியில் இருந்து, கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து, நேற்று பொன்னேரி தாசில்தார் சோமசுந்தரம் உத்தரவிட்டார்.