/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 03, 2025 12:15 AM

கும்மிடிப்பூண்டி:ஆரம்பாக்கம் வாலிபர் கொலை வழக்கில், மேலும் ஒருவர் கைதான நிலையில், ஏற்கனவே கைதான ஆறு பேரில், மூவர் தப்ப முயன்றபோது கீழே விழுந்து, கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே அரும்பாக்கம் ஏரிக்கரை பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 26, என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், நேற்று முன்தினம் ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர், 23, கார்த்திக், 21, சாரதி, 20, பெரிய ஓபுளாபுரம் மணிகண்டன் என்கிற பொட்டுமணி, 27, ஆந்திர மாநிலம் பெரியவேட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, 19, ராஜேஷ், 20, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
விசாரணையில், பத்து பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான நான்கு பேரில், மணிகண்டன் என்கிற போண்டாமணி, 35, என்பவரை நேற்று கைது செய்தனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.
கைதான நபர்களில் பொட்டுமணி, சங்கர் மற்றும் கார்த்திக் ஆகியோர் தப்ப முயன்று கீழே விழுந்ததில், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.