/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுக்கூடமாக மாறி வரும் கிராம சேவை மையம்
/
மதுக்கூடமாக மாறி வரும் கிராம சேவை மையம்
ADDED : மே 25, 2025 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்நல்லாத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார் ஊராட்சி. இப்பகுதியில் 2015 -- 16ம் ஆண்டு, 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது.
இந்த கிராம சேவை மையம் கட்டப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.தற்போது கிராம சேவை மையம், 'குடி'மகன்களின் மதுக்கூடமாக மாறியுள்ளது, பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.