/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் கடை திறக்கவிடாமல் கிராம பெண்கள் முற்றுகை
/
டாஸ்மாக் கடை திறக்கவிடாமல் கிராம பெண்கள் முற்றுகை
ADDED : ஜன 08, 2024 11:31 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
தேர்வழி கிராமத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், பள்ளி மாணவியர், பெண்களை கேலி கிண்டல் செய்தல் உள்ளிட்ட குற்ற செயல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் அந்த கடையை மூட வேண்டும் என பல மாத காலமாக பெண்கள் போராடி வருகின்றனர்.
கடையை மூட வலியுறுத்தி, டிசம்பர் 8ம் தேதி, கிராம பெண்கள், 30 பேர் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது சமாதானம் பேசிய அரசு தரப்பினர், ஒரு மாத காலத்திற்குள் கடை இடம் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்திருந்தனர்.
ஒரு மாத காலம் முடிந்த நிலையில், நடவடிக்கையில்லை என்பதால், நேற்று தேர்வழி ஊராட்சி தலைவர் கிரிஜா தலைமையிலான, 20 பெண்கள் நேற்று கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், பெண்களிடம் சமாதானம் பேசினார்.
டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வரும் 31ம் தேதிக்குள் கடை இடம் மாற்றம் செய்யப்படும் அல்லது மூடப்படும் என, எழுத்துப் பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.