/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி பகுதியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
/
திருத்தணி பகுதியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
திருத்தணி பகுதியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
திருத்தணி பகுதியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : மார் 28, 2025 02:14 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.,கிராமத்தில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி தெருக்குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஒரு வாரமாக மின்மோட்டார் பழுது மற்றும் புதிய ஆழ்துளை கிணற்றுக்கு மின்இணைப்பு பெறாததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தராமல் மெத்தனம் காட்டி வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கே.ஜி.கண்டிகை-- நொச்சலி மாநில நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே முட்செடிகள் போட்டு மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது புதிய ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் அமைத்து உடனே குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி கூறியதும் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
★★