/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஈக்காடில் தரமற்ற குடிநீர் வினியோகம்:கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
/
ஈக்காடில் தரமற்ற குடிநீர் வினியோகம்:கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
ஈக்காடில் தரமற்ற குடிநீர் வினியோகம்:கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
ஈக்காடில் தரமற்ற குடிநீர் வினியோகம்:கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
ADDED : செப் 15, 2025 10:41 PM
ஈக்காடு;ஈக்காடு ஊராட்சியில் வினியோகிக்கப்படும் குடிநீர் தரமில்லாமல் உள்ளது. இந்த குடிநீரை பரிசோதனை செய்ய வேண்டும் என, கலெக்டரிடம், கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு ஊராட்சியைச் சேர்ந்த மக்கள், கலெக்டரிடம் நேற்று அளித்த மனு விபரம்:
ஈக்காடு மண்டபம் தெருவில் வீரராகவர் கோவில் உள்ளது. இந்த தெருவில் மின்வாரிய அலுவலகம், ரேஷன் கடை, நுாலகம் அமைந்துள்ளது. தெரு நுழைவாயிலில் இருந்த சிறுவர் பூங்கா பாழடைந்து, குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.
மழைக்காலத்தில் மண்டபம் தெருவில் மழைநீர் தேங்கி, கழிவுநீராக மாறி விடுகிறது.
இதனால், பகுதிமக்கள், பள்ளி மாணவ - மாணவியர் சேற்றில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
மேலும், வீடு மற்றும் தெருக்களில் உள்ள குழாய்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் தரம் இல்லாமல் உள்ளது. தண்ணீரை காய்ச்சினால் பிசுபிசுப்பாக உள்ளது.
எனவே, குடிநீர் வாரியத்தினர், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்து, மக்களுக்கு வினியோகிக்க வேண்டும்.
பல தெருக்களில் உள்ள வீடுகள் முன் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இவற்றை சரிசெய்து, மழைநீர் கால்வாய் அமைத்து, தரமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.