/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமுதாய கூடம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
/
சமுதாய கூடம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை
ADDED : ஏப் 30, 2025 06:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது பெரியகளக்காட்டூர், சின்னகளக்காட்டூர், ஜே.எஸ்.ராமாபுரம் கிராமங்கள். இந்த மூன்று கிராமங்களில் 8,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்ப விழாக்களை சின்னம்மாபேட்டை, தக்கோலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பணச் செலவு அதிகரிப்பதோடு, நேரமும் விரயமாகிறது.
எனவே, பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.