/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க மேல்நல்லாத்துார் கிராமவாசிகள் எதிர்ப்பு

ADDED : நவ 12, 2024 07:26 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியுடன் இணைய மேல்நல்லாத்துார் ஊராட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துகலெக்டரிடம் மனுஅளித்தனர்.
திருவள்ளூர் நகராட்சியுடன், அருகில் 10 ஊராட்சிகள் இணைக்க தமிழக நகராட்சி நிர்வாக துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, நகராட்சி பகுதிக்கு அருகில் உள்ளஈக்காடு, காக்களூர், சேலை, தலக்காஞ்சேரி, வெங்கத்துார், மேல்நல்லாத்துார், சிறுவானுார், திருப்பாச்சூர், புட்லுார் மற்றும்தண்ணீர்குளம் ஆகிய ஊராட்சிகளை இணைக்க வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேல்நல்லாத்துார் ஊராட்சியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் கலெக்டரிடம் வழங்கிய மனு:
மேல்நல்லாத்துார் ஊராட்சியில் மேல் நல்லாத்துார், பட்டரைகிராமங்கள் உள்ளன.எங்கள் ஊராட்சியில் 85 சதவீதம் பேர் விவசாய கூலிகள்.100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை இழப்பு, வரி விகிதம் உயர்வு போன்ற இடையூறு ஏற்படும்.
எனவே, எங்கள் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.