/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் நிலத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
/
கோவில் நிலத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
கோவில் நிலத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
கோவில் நிலத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 21, 2025 03:36 AM
பொன்னேரி: இளங்காளியம்மன் கோவில் நிலத்தில், ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கு, கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தில், 100ஆண்டுகள் பழமையான இளங்காளியம்மன் கோவில் அமைந்து உள்ளது.
மாதவரம், சைனாவரம், பெருஞ்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களின் வழிபாட்டு ஸ்தலமாகஉள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான, 72 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியில், மாதவரம் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
நேற்று இளங்காளியம்மன் கோவில் வளாகத்தில் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்களை கண்டித்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், வருவாய்த்துறையினரிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, தரை வாடகைக்குவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, பூசாரி சம்பளம், சித்திரை மாத தீமிதி திருவிழா, பவுர்ணமி திருவிழா உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்படுகிறது. கோவில் நிலத்தில் தான் ஆண்டுதோறும் தீமீதி திருவிழா நடைபெறுகிறது. இந்த இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகம் வேறு ஒரு இடத்தை பரிந்துரைத்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் கோவில் நிலத்தில் கட்டடம் கட்ட திட்டமிடுகிறது.
கோவில் நிலத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் அமைந்தால், தீமிதி திருவிழா நடத்த முடியாத சூழல் ஏற்படும். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய இடத்தில் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

