/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பரிக்குப்பட்டில் கால்வாய் அகலத்திற்கு பாலம் அமைக்க கிராமவாசிகள் காத்திருப்பு

ADDED : அக் 24, 2024 01:02 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெரியகாவணம், பரிக்குப்பட்டு, உப்பளம், மடிமைகண்டிகை வழியாக, ஆசானபூதுார் ஏரிக்கு செல்லும் ஓடைக்கால்வாய் அமைந்துள்ளது.
பரிக்குப்பட்டு -- கூடுவாஞ்சேரி கிராமங்களுக்கு இடையே உள்ள இந்த கால்வாயின் குறுக்கே, போக்குவரத்து வசதிக்காக சிறு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
கால்வாயின் அகலம், 50 அடியாக உள்ள நிலையில், சிறுபாலம், 3 அடியாக உள்ளது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஓடைக்கால்வாயில் அதிகப்படியான தண்ணீர் வரத்து இருக்கும்போது, குறுகிய பாலத்தின் வழியாக வெளியேற முடியாமல், சாலையின் மீது வழிந்தோடுவதால், பரிக்குப்பட்டு -- கூடுவாஞ்சேரி இடையே போக்குவரத்து பாதிக்கிறது.
மழைக்காலங்களில் இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும், மாற்று பாதையில், 3 கி.மீ., தொலைவு சுற்றிச்செல்லும் அவலநிலை ஏற்படுகிறது.
கால்வாய் அகலத்திற்கு பாலம் அமைத்து, மழைநீர் தடையின்றி செல்ல மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.