/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி தளபதி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
/
திருத்தணி தளபதி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
UPDATED : ஆக 27, 2025 02:44 AM
ADDED : ஆக 27, 2025 02:30 AM

திருத்தணி:தளபதி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
திருத்தணி ம.பொ.சி.சாலையில் இயங்கி வரும், தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா பள்ளி தாளாளர் எஸ். பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது.
முதல்வர் பாலாஜி வரவேற்றார். விழாவில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன.
அப்போது பள்ளி மாணவ - மாணவியர் விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சரஸ்வதி, சிவபெருமான், பார்வதி, லட்சுமி உள்பட பல்வேறு தெய்வ வடிவத்தில் வேடமணிந்து காட்சி அளித்தனர்.
விநாயகருக்கு பள்ளி தாளாளர் எஸ். பாலாஜி சிறப்பு பூஜை நடத்தி வழிப்பட்டார். மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.