/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விஸ்வரூப அனுமன் சிலை பள்ளிப்பட்டில் பிரதிஷ்டை
/
விஸ்வரூப அனுமன் சிலை பள்ளிப்பட்டில் பிரதிஷ்டை
ADDED : ஜன 17, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து, நகரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில். காணும் பொங்கல் திருநாளான நேற்று, காலை 8:30 மணிக்கு, 21 அடி உயரம் கொண்ட விஸ்வரூப அனுமன் சிலை பிரதிஷ்டை நடந்தது.
இதற்கான கோபூஜை, கடந்த 12ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் மாலை ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இந்த விழாவில் பள்ளிப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.