/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே இன்ஸ்பெக்டருக்கு விஸிஸ்டா புரஸ்கார் பதக் விருது
/
ரயில்வே இன்ஸ்பெக்டருக்கு விஸிஸ்டா புரஸ்கார் பதக் விருது
ரயில்வே இன்ஸ்பெக்டருக்கு விஸிஸ்டா புரஸ்கார் பதக் விருது
ரயில்வே இன்ஸ்பெக்டருக்கு விஸிஸ்டா புரஸ்கார் பதக் விருது
ADDED : பிப் 09, 2024 09:40 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில்வே போலீஸ் பிரிவில் 2021 முதல் செபாஸ்டின் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் சிறப்பு வழக்கு ஒன்றைக் கண்டறிந்து, 02 ரிசீவர்கள் உட்பட 7 பேரை கைது செய்ததோடு, திருடப்பட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 660 ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்துக்களை மீட்டார்.
நடப்பு ஆண்டில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் கடத்தப்பட்ட 4,890 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தார்.
மேலும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் ரயில்வே பகுதிகளில் அத்துமீறுபவர்கள், குழந்தைகள், ஆள் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தினார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றிய ஸ்ரீ விவேகானந்த் சுக்லா ஆகியோரால் 2023 ஜூலை 16ல் தொடங்கி வைக்கப்பட்ட ஆசாதி கா அம்ரித் மஹோத்சவைக் கருத்தில் கொண்டு 'ஒற்றுமைக்கான ஓட்டம்' ஏற்பாடு செய்வதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
திருவள்ளூர் நகர போலீஸ் நிலைய வழக்கு ஒன்றில் கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவி செய்தார்.
இந்நிலையில் இவரது சேவையை பாராட்டி, சென்னை ஐ.சி.எப்., அரங்கத்தில் நேற்று நடந்த 68வது ரயில்வே புரஸ்கார் விழாவில் விஸிஸ்டா ரயில்வே புரஸ்கார் பதக் விருதை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாதன் வழங்கினார்.