/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுாறு நாள் வேலையை தொடர கோரி வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
/
நுாறு நாள் வேலையை தொடர கோரி வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
நுாறு நாள் வேலையை தொடர கோரி வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
நுாறு நாள் வேலையை தொடர கோரி வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
ADDED : ஏப் 21, 2025 11:48 PM

திருவள்ளூர், திருவள்ளூர் நகராட்சியுடன் அருகில் உள்ள காக்களூர், ஈக்காடு, சேலை உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, ஒன்பது ஊராட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக, கலெக்டரிடமும் மனு அளித்தனர்.
இந்த ஊராட்சிகளில் ஒன்றான கடம்பத்துார் ஒன்றியம், மேல்நல்லாத்துார் கிராமவாசிகள், நேற்று வாக்காளர் அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் வட்டம், கடம்பத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்நல்லாத்துார் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களது கிராம நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு, மனைகளாகி விட்டது. அதனால், விவசாய கூலி தொழிலாளர்களான நாங்கள், நுாறு நாள் வேலை திட்டத்தை நம்பி, அதில் வேலை செய்து வருகிறோம்.
இந்நிலையில், எங்கள் கிராமத்தை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கப்பதால், நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி வாய்ப்பு ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிட்டது. எனவே, எங்கள் கிராமத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மனுவுடன் தாங்கள் கொண்டு வந்திருந்த வாக்காளர் அடையாள அட்டையை, கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை, போலீசார் தடுத்து நிறுத்தி, மனுவை மட்டும் கலெக்டரிடம் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.