/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்
ADDED : நவ 17, 2025 12:43 AM

திருத்தணி: தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதையடுத்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று, வாக்காளர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திரும்ப பெறும் பணியும் செய்து வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வழங்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது கடினம் என்பதால், திருவள்ளூர் மாவட்டம் முழுதும் நேற்று, ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது.
அந்த வகையில், திருத்தணி சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. இதில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தீர்த்து வைத்தனர்.
இதில், ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்த னர்.