/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு மருத்துவமனையில் இரும்பு குழாய்கள் அமைக்க முடிவு
/
திருத்தணி அரசு மருத்துவமனையில் இரும்பு குழாய்கள் அமைக்க முடிவு
திருத்தணி அரசு மருத்துவமனையில் இரும்பு குழாய்கள் அமைக்க முடிவு
திருத்தணி அரசு மருத்துவமனையில் இரும்பு குழாய்கள் அமைக்க முடிவு
ADDED : நவ 17, 2025 12:36 AM

திருத்தணி: -: திருத்தணி அரசு மருத்துவமனைக்குள் நுழையும் கால்நடைகளை தடுக்க, நுழைவாயில் பகுதியில் இரும்பு குழாய்கள் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது.
திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை, ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை, 45 கோடி ரூபாயில் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இங்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதுதவிர, 200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். சில நாட்களாக ஆடு, மாடுகள் போன்றவை, பகல் மற்றும் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிவதும், படுத்து உ றங்குவதும் தொடர்ந்தது. இதனால், நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
திருத்தணி பொதுப்பணி துறையினர், மருத்து வமனைக்குள் கால்நடைகள் நுழைவதை தடுப்பதற்காக, மருத்துவமனை நுழைவாயிலில் இரும்பு குழாய்கள் அமைக்க முடிவு செய்தனர். தற்போது, துரித வேகத்தில் நடந்து வருகிறது.
'ஒரு வாரத்திற்குள் நுழைவாயிலில் இரும்பு குழாய்கள் அமைக்கப்படும். இதனால், கால்நடைகள் உள்ளே நுழைவதை தடுக்க முடியும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

